இங்கிலாந்தில் 15 வயது மாணவியுடன், 30 வயதான கணக்கு ஆசிரியர் நாட்டை விட்டு ஓடி விட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இங்கிலாந்தை சேர்ந்தவர் ஜெரிமி பாரஸ்ட்(வயது 30) கணக்கு ஆசிரியர் ஆவார். இவரது வகுப்பில் படித்து வந்தவர் மேகான் ஸ்டேமர்ஸ்(வயது 15) .
இந்த மாணவிக்கும், இருவருக்கும் இடையே காதல் மலர்ந்து பல மாதங்களாக இது நீடித்தது. இருவரும் பலமுறை உறவிலும் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் மேகானுடன், பாரஸ்ட் திடீரென தலைமறைவாகி விட்டார். இந்த சம்பவம் இங்கிலாந்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சசெக்ஸ் பொலிஸார் கூறுகையில், கடந்த வாரம் தான் இந்த சம்பவம் குறித்து எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. இருவரும் இங்கிலாந்தில் எங்கும் இருப்பதாக தெரியவில்லை. அவர்கள் ஐரோப்பிய நாடுகள் ஏதாவது ஒன்றில் புகுந்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம் என்றார்.
இருவரும் பிரான்ஸுக்குப் போயிருப்பதாக முதலில் கூறப்பட்டது. ஆனால் பிரான்ஸில் அவர்கள் இருப்பது போலத் தெரியவில்லை என்று பிரெஞ்சு பொலிஸார் கூறியுள்ளனராம்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், இருவரும் இங்கு இருப்பதாக நாங்கள் நினைக்கவில்லை. இதுதொடர்பாக அனைத்து எல்லைப் பகுதி வீடியோ பதிவுகளையும் அலசி விட்டோம். அவர்கள் பெல்ஜியம், ஹாலந்து, ஜேர்மனிக்குத் தப்பியிருக்க வாய்ப்புள்ளது அல்லது வேறு ஏதாவது ஒரு நாட்டுக்குப் போயிருக்கலாம் என்றனர்.
ஆசிரியருக்கும், மாணவிக்கும் இடையே நீண்ட காலமாகவே உறவு இருந்திருக்கிறது. இதுதொடர்பாக அவர்களின் பள்ளி நிர்வாகமும் கூட 7 மாதங்களுக்கு முன்பு இருவரையும் கூப்பிட்டுக் கண்டித்துள்ளதாம். ஆனால் தொடர் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.
0 கருத்து:
கருத்துரையிடுக