தெரணியகல – உடபாகே தோட்ட மத்திய பகுதி லயன் ஒன்றின் காணில் இருந்து சிசுவொன்று தெரணியகல பொலிஸாரால் நேற்று காலை மீட்கப்பட்டுள்ளது.இது குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் வழங்கியுள்ள தகவலின்படி மேலும் தெரியவருவதாவது,
சிசு மீட்கப்பட்டு நடத்தப்பட்ட விசாரணையில் 18 வயது பாடசாலை மாணவி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.திருமணம் ஆகாத குறித்த மாணவி இளைஞன் ஒருவரை காதலித்துள்ளார். அதன் விளைவாக அவர் கர்ப்பமடைந்துள்ளார்.
2012-09-22ம் திகதியன்று குறித்த மாணவிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அதன்போது மாணவியின் காதலன் அவருக்கு மருந்து வகை ஒன்றை வழங்கியுள்ளார்.அதன் பின்னர் 2012-09-23ம் திகதி இரவு குறித்த மாணவி மலசலகூடம் சென்றபோது பிரசவ வலி ஏற்பட்டு குழந்தை பிறந்துள்ளது.
இந்த நிலையிலேயே சிசு காணில் வீசி எறியப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.குறித்த மாணவி சிகிச்சைகளுக்கென அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மாணவியின் காதலன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இன்று அவிசாவளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.தெரணியகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக