புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

saraமூன்று குழந்தைகளுக்கு தாயான 32 வயது மதிக்கதக்க யுவதி ஒருவர் 19 வயது பெண்ணாக மாறிய சம்பவம் பிரிட்டனில் நடந்துள்ளது.
சாரா தாம்சன் என்ற பெண் தலையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பத்து நாட்களாக மயக்க நிலையில் இருந்துள்ளார்.இவரை பரிசோதித்த மருத்துவர் தலையில் உள்ள இரத்த நாளங்கள்
வெடிக்கும் தருவாயில் இருப்பதால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்துள்ளார்.
சிகிச்சைக்கு பின் குணமடைந்த சாரா தனது 14 வருட நினைவாற்றலை இழந்துள்ளார். தன்னை ஒரு ஸ்பைஸ் கேர்ளாகவும், தன்னையே சுற்றி வந்த காதலனை வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்த நிகழ்வுகளும் தான் இவருடைய ஞாபகத்தில் இருக்கின்றன. மைக்கில் ஜாக்சன் உயிரோடு இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கின்றார்.
மூன்று குழந்தைகள் இருப்பதை முற்றிலுமாக மறந்து விட்டார், 14 வயதுடைய மூத்த மகன் இன்னும் கைக்குழந்தையாக இருப்பதாகவே நினைத்துக் கொண்டிருக்கின்றார்.
கண்ணாடியில் தனது முகத்தை பார்த்த சாரா ஒரே நாளில் தான் வயதாகி விட்டதாக கவலையுடன் தெரிவித்துள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top