புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

BC மாகாணத்தில் உள்ள Quesnel நகரத்தை சேர்ந்த 68 வயது நிரம்பிய பெண்மணி ஒருவர் ஏழு வயது சிறுவனை கடத்த முயன்ற போது கைதுசெய்யப்பட்டார்.
கடத்தலை தடுத்து நிறுத்திய 13 வயது சிறுமி பாராட்டுக்குரியவள் என்று RCMP தெரிவித்துள்ளது.


வியாழக்கிழமை இரவன்று பொதுக்கூட்டம் ஒன்றில் இருந்த சமயம் அந்த பெண்மணி சிறுவனுடைய மணிக்கட்டை பிடித்து இழுத்து தன்னுடைய வாகனத்தில் ஏற்ற முயன்றுள்ளார். அந்த சிறுவனை நன்றாக அறிந்த சிறுமி அவனை காப்பாற்றும் முயற்சியில் தன் பக்கம் இழுத்தாள்.

சம்பவ இடத்திலிருந்து பெண்மணி தன் வாகனத்தை கிளப்பினார். ஆனால் ஒரு சில நிமிடங்களில் காவல்துறை அவரை வழிமறித்து கைதுசெய்தது.

குழந்தைக்கும் அவனுடைய பெற்றோருக்கும் அந்த பெண்மணி முன்பின் தெரியாதவராவார்.. காவல்துறையினரால் இது ஒரு தனிப்பட்ட சம்பவமாக கருதப்படுக்கிறது

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top