இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ் தனது மனைவி கேத்ரீன் மிடில்டனுடன் பிரான்சு நாட்டுக்கு சமீபத்தில் சென்று இருந்தார். அங்குள்ள மாளிகை ஒன்றில் இருவரும் தங்கி இருந்தனர். அப்போது கேத்ரீன் மேலாடை இல்லாமல் மாளிகையில் உலாவினார். இதை புகைப்படக்காரர் ஒருவர் மறைந்திருந்து படம் எடுத்து உள்ளார்.
அந்த படத்தை பிரான்சு நாட்டு பத்திரிக்கைக்கு விற்று விட்டார். அந்த படத்தை பிரான்சு பத்திரிக்கை பிரசுரித்து உள்ளது. இதை அறிந்த வில்லியம்சும், கேத்ரீனும் கடும் கோபம் அடைந்துள்ளனர். அடுத்தவரின் தனிப்பட்ட அந்தரங்க வாழ்க்கையில் இப்படி அத்து மீறி நுழைவது அருவருக்கத்தக்கது என்று அவர்கள் கூறியுள்ளனர்.
மேலும் அந்த பத்திரிக்கை மீது வழக்கு தொடரவும் அவர்கள் வக்கீலுடன் ஆலோசனை நடத்தி உள்ளனர். வில்லியம்சின் தாயார் டயனா தனிப்பட்ட வாழ்க்கையை புகைப்படக்காரர்கள் விரட்டி விரட்டி படம் எடுத்தனர். அப்படி படம் எடுக்க விரட்டிய போது தான் அவர் கார் விபத்தில் சிக்கி மரணம் அடைந்தார்.
எனவே வில்லியம்ஸ் குடும்ப வாழ்க்கையில் பத்திரிக்கைகள் அத்துமீறி நுழைவது சரியல்ல என்று இங்கிலாந்து அரச குடும்பம் செய்தி வெளியிட்டுள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக