புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கடந்த 13ஆம் திகதி வியாழக்கிழமை சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிறுமி ஒருவர் தெல்லிப்பழை ஆதாரவைத்தியசாலைக்குச் சென்று வீடு திரும்பாத நிலையில் பெற்றோரால், பொலிஸில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டிருந்தது.



இளைஞன் ஒருவர் குறித்த சிறுமியை யாழ்.பஸ் தரிப்பு நிலையத்திலிருந்து ஆசை வார்த்தைகள் கூறி அழைத்துச் சென்றுள்ளார். இதன் பின்னர் சிறுமியைப் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி வீட்டுக்கும் அழைத்துச்சென்றுள்ளார். வீட்டில் இச் சிறுமியை இளைஞனின் தந்தையும் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார்.

இவர்களிடமிருந்து தப்பிச்சென்ற சிறுமியை பொலிஸார் விசாரணை செய்ததன் பின்னர் குறித்த தந்தையையும் மகனையும் கைதுசெய்து சட்ட நடவடிக்கைக்குட்படுத்தியுள்ளனர். (தந்தைக்கு 56 வயதும் மகனுக்கு 19 வயதுமெனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.)

இச் சம்பவம் இப் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் பெண்கள் தனித்து நடமாடவும் அச்சமடைந்துள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top