புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


அடுப்பை பற்ற வைக்கும் போது தவறுதலாக ஆடையில் தீ பிடித்ததினால் எட்டு மாத கர்ப்பிணித்தாய் ஒருவர் இன்று (29) சனிக்கிழமை உயிரிழந்துள்ளார்.

மன்னார் – வெள்ளாங்குளம் சேவா கிராமத்தில் வசிக்கும் இளம் குடும்பப் பெண்ணான நிசாந்தன் மயூறி (வயது 18) என்ற பெண்ணே உயிரிழந்துள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண் யாழ். போதனா வைத்தியசாலைக்கு எரிகாயங்களுக்கு இலக்கான நிலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பயனளிக்காத நிலையில் உயிரிழந்துள்ளார்.

இவரது சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

அவரது மரணம் தொடர்பாக மன்னார் பொலிஸார் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு வருகை தந்து குறித்த பெண்ணின் தாயாரிடமும் கணவனிடமும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top