புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


மறைவிடம் ஒன்றில் நின்று மதுபானம் வாங்கித் தருமாறு சிறுவர்கள் கோரிய நிலையில், அவற்றை வாங்கிக் கொடுத்தவர் தனது உடைமைகளை இழந்தார். இந்தச் சம்பவம் அண்மையில் சாவகச்சேரி நகர்ப் பகுதியில் இடம்பெற்றது. வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய
குடும்பஸ்தர் ஒருவரிடம் மறைவிடம் ஒன்றில் நின்ற சிறுவர்கள் தமக்கு மதுபானம் வாங்கித் தருமாறு கேட்டுள்ளனர்.

அவர்களிடம் பணம் பெற்று, மதுபானம் வாங்கிக் கொடுத்தபோது தம்முடன் குடிக்க வருமாறு சிறுவர்கள் கோரியுள்ளனர். இவர்களின் "அன்புத் தொல்லையை" மீறமுடியாமல் அவர்கள் கொடுத்த மதுவை அருந்திய சில நிமிட நேரத்தில் குறித்த நபர் மயக்கமானார். மறுநாள் காலையில் அவ்வழியே சென்ற ஒருவர் அவரைத் தட்டி எழுப்பியபோதுதான் அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலி, மோதிரம், கையடக்கத் தொலைபேசி மற்றும் பணம் ஆகியவை திருடப்பட்டமை தெரியவந்தது. மதுவின் தாக்கத்தால் பல மணிநேரம் கண்விழிக்க முடியாத நிலை தனக்கு ஏற்பட்டது என்கிறார் குறிப்பிட்ட நபர். சாவகச்சேரி வடக்கைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவருக்கே இந்த நிலைமை ஏற்பட்டது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top