இங்கிலாந்தில் தங்களது ஐந்து நாய்களுடன் வாக்கிங் போன ஒரு இளம் ஜோடி , ஆற்றில் பெருக்கெடுத்த திடீர் வெள்ளத்தில் நாய்கள் அடித்துக் கொண்டு போனதைப் பார்த்து அவற்றைக் காப்பாற்ற ஆற்றில் குதித்தனர். இதில் ஐந்து நாய்களையும் காப்பாற்றி விட்டனர். ஆனால் அந்த இளம் ஜோடி பரிதாபமாக உயிரிழந்தது.
அந்தத் தம்பதி அலிசியா வில்லியம்ஸ் மற்றும் அவரது காதலர் டேவிட் பிளாட். முதலில் அலிசியாவின் உடலை போலீஸார் மீட்டனர். தொடர்ந்து டேவிட்டின் உடல் சிக்கியது.
வடக்கு வேல்ஸில் உள்ள கிளெடாக் ஆற்றில்தான் இந்த துயரச் சம்பவம் நடந்தது. அவர்கள் தங்களது நாய்களுடன் வாக்கிங் போனபோது ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் ஒரு நாய் சிக்கிக் கொண்டது. அதைக் காப்பாற்ற அலிசியாவும், டேவிட்டும் ஆற்றில் குதித்தனர். அப்போது நாயைக் காப்பாற்றி விட்டனர். ஆனால் அவர்களை நீர் அடித்துச் சென்று விட்டது.
அலிசியாவுக்கு 27 வயதாகிறது, காதலர் டேவிட்டுக்கு 25 வயதாகிறது. கடந்த ஒன்றரை வருடமாக இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்தனராம்
0 கருத்து:
கருத்துரையிடுக