புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

கொழும்பில் இன்று இடம்பெற்ற இரத்தின கற்கள் கண்காட்சிக்கு சென்று இருந்த சீனர் ஒருவர் 14000 அமெரிக்க டொலர் பெறுமதியான வைரம் ஒன்றை திருட்டு முயற்சியில் விழுங்கி உள்ளார்.இவருக்கு
வயது 32. சீனச் சகபாடி ஒருவருடன்தான் வந்து இருந்தார்.வைரத்தை காட்சிக்கு வைத்து இருந்தவர்களுக்கு ஒருவர் கதை கொடுக்க மற்றவர் களவாட முயன்றார்.

ஆயினும் வைரத்தை காட்சிக்கு வைத்து இருந்தவர்கள் களவு முயற்சியை சரியாகவே அறிந்து கொண்டனர்.சீனக்காரன் வைரத்துடன் ஓட்டம் பிடித்தார்.
ஆனால் மடக்கிப் பிடிக்கப்பட்டார்.இந்நேரம் பார்த்து வைரத்தை விழுங்கி விட்டார்.பொலிஸ் கேஸ் ஆகி விட்டது.கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டு எக்ஸ் ரே பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.

இவரது உணவுக் குழாய்க்குள் கல் போன்ற பொருள் சிக்கி இருப்பது அவதானிக்கப்பட்டது.உடனடியாக சத்திர சிகிச்சை மூலம் வைரத்தை வெளியில் எடுக்கா விட்டால் சீனக்காரனின் உயிருக்கே ஆபத்தாகி விடும் என்று வைத்திய நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர்.சத்திர சிகிச்சையின் அவசியம் குறித்து நீதிமன்றத்துக்கும் அறிவிக்கப்பட்டு உள்ளது.சீனக்காரன் தற்போது பொலிஸ் காவலில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளார்.

சீனர்கள் இருவரும் கடந்த திங்கட்கிழமை இலங்கைக்கு வந்து இருக்கின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top