புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

வென்னப்புவவில் கங்கொட தேவாலயத்துக்கு அருகில் பெட்டிக் கடை வைத்து இருந்த 49 வயதுப் பெண் ஒருவர் 22 வயது இளைஞனால் பலாத்கார செக்ஸிற்கு உட்படுத்தப்பட்டு உள்ளார்.கற்பழிக்கப்பட்டவர் இ
ரு பிள்ளைகளின் தாய். இவரது மகள் படிப்பு நடவடிக்கைகளுக்காக சித்தி வீட்டில் தங்கி இருக்கின்றார். மகன் வெளிநாடு ஒன்றில் வேலை பார்க்கின்றார். இவரது மகனைக் காட்டிலும் வயது குறைந்தவர் கற்பழிப்புப் பேர்வழி.
 
சம்பவ தினம் சொந்தக்காரர் வீட்டுக்கு சென்று இருந்தார் பெண்ணின் மாமி. திருவிழா கொண்டாட்டம் என்பதால் இரவு 11.00 மணி வரை கடையை திறந்து வைத்து இருந்தார் பெண். பின்னர் கடைக்குள்ளேயே தூங்கினார்.வைகறை 3.00 மணி இருக்கும். அன்ரி, அன்ரி என்று ஒரு குரல் கேட்டது. உள்ளே இருந்தபடி ஆர்? என்று கேட்டார் பெண்.சைக்கிள் பழுதாகி விட்டது, திருத்த 100 ரூபாய் தாருங்கள் என்று பதில் வந்தது.

ஆர் நீங்கள்? என்று திரும்ப கேட்டமைக்கு பதில் வரவில்லை.ஆனால் சுவர் வழியாக கடைக் கூரையில் எவரோ ஏறுகின்ற சத்தம் பெண்ணுக்கு கேட்டது.
கள்வனாக இருக்க வேண்டும் என்று நினைத்தார் பெண்.கூரையில் நடப்பவர் ஆர்? என்று பெரிதாக சத்தமிட்டு வினவினார் பெண்.கடையை திறந்து ஆட்களை உதவிக்கு கூப்பிட்டார்.கடைக்கு வாடிக்கையாளராக வருகின்ற இளைஞன் ஒருவர்தான் கூரை வழியாக உள்ளே குதித்தவர் என்பதை கண்டு கொண்டார்.

கத்தி முனையில் பெண்ணை மிரட்டினார் இளைஞன். சத்தம் இட்டால் கொன்று விடுவார் என்று அச்சுறுத்தினார். செக்ஸ் வைக்க வரும்படி இப்பெண்தான் அழைத்து இருந்தார் என்று ஊரவர்களுக்கு சொல்லி விடுவார் என்று சொல்லி பயமுறுத்தினார்.பெண்ணால் ஒன்றும் உடனடியாக செய்ய முடியவில்லை. பெண்ணுடன் பலாத்கார செக்ஸ் வைத்துக் கொண்டார். அத்துடன் பெண்ணின் உடைமையில் இருந்து சில ஆயிரம் ரூபாய் தாள்களை எடுத்துக் கொண்டு ஓட்டம் பிடித்தார்.

ஆயினும் பொலிஸில் முறையிட்டார் பெண். இளைஞன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜராக்கப்பட்டார். நேர்ந்த கொடூரத்தை கண்ணீர் ததும்ப நீதிமன்றத்தில் எடுத்துச் சொன்னார் யுவதி. இவருக்கு நேர்ந்த அநீதியை கவனமாக செவிமடுத்தார் நீதிபதி.இளைஞன் குற்றவாளியாக நீதிமன்றால் காணப்பட்டார். 15 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top