புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

பேஸ்புக் மூலம் அறிமுகமான மாணவ நண்பியுடன் மொறட்டுவவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஒரே அறையில் தங்கி இருந்த ஆண் மாணவர்கள் மூவர் இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில்
பொலிஸாரால் கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டு உள்ளனர்.ஹோட்டல் அறையை பொலிஸார் முற்றுகை இட்ட நேரம் குளியல் அறைக்குள் மாணவி இருந்து இருக்கின்றார்.

ஆண் மாணவர்கள் மூவரும் கட்டிலில் அமர்ந்து இருந்து மதுபானம் குடித்துக் கொண்டு இருந்தனர்.ஆண் மாணவர்கள் மூவரும் க.பொ. த சாதாரண தர பரீட்சைக்காக படிப்பவர்கள். பேஸ் புக் அரட்டை மூலம் இந்நண்பியை வசப்படுத்தி இருந்தனர். மாணவியும் க. பொ. த சாதாரண தரம் படிப்பவர்தான்.மேலதிக வகுப்புக் காரணமாக வீட்டுக்கு வர நேரம் செல்லும் என்று பெற்றோருக்கு சொல்லி விட்டு ஹோட்டலுக்கு உல்லாசம் அனுபவிக்க வந்திருக்கின்றனர்.

படிப்புச் செலவுக்கு மேலதிக பணம் தேவை என்று பெற்றோரிடம் கேட்டுப் பெற்றுக் கொண்டனர். இப்பணத்தை பயன்படுத்தி ஹோட்டலில் ரூம் பெற்றனர்.
நால்வரும் மொறட்டுவ பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இவர்களின் பெற்றோர் வரவழைக்கப்பட்டனர்.பிள்ளைகளின் நடவடிக்கைகள் குறித்து விழிப்பாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என்று பொலிஸ் அதிகாரிகளால் ஆலோசனை வழங்கப்பட்டது.கடுமையாக எச்சரிக்கப்பட்ட பின்னர் பெற்றோருடன் பிள்ளைகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top