புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


68 வயது சட்டத்தரணி ஒருவர் அவரது 21 வயது ஆசை நாயகியால் சுத்தியலால் அடித்துப் படுகொலை செய்யப்பட்டு உள்ளார்.
சட்டத்தரணியின் பெயர் வில்சன் ஜயவர்தன. ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகளுக்கு தந்தை ஆனவர். கடந்த 06 மாதங்களாக மனைவி, பிள்ளைகள் ஆகியோரை விட்டு விட்டு ஆசை நாயகியுடன் அத்துருகிரியவில் வாடகை வீட்டில் வசித்து வந்து இருக்கின்றார்.

ஆசை நாயகிக்கும் இவருக்கும் இடையில் நேற்று தகராறு ஏற்பட்டு இருக்கின்றது. இவர் ஆசைநாயகியின் பின் பக்கத்தில் கடித்து இருக்கின்றார். பதிலுக்கு ஆசை நாயகி இவரை மேல் மாடியில் இருந்து தள்ளி விட்டார். தொடர்ந்து இவரின் தலையல் சுத்தியலால் விடாமல் போட்டுத் தாக்கி இருக்கின்றார்.

இப்படுகொலை தொடர்பாக பொலிஸார் ஆரம்பத்தில் விசாரித்தபோது காலையில் வீட்டுக்கு வந்த இனம் தெரியாத கும்பல் கதவை தட்டியது என்றும் கதவை சட்டத்தரணி திறந்தபோது குத்திக் கொன்றனர் என்றும் கதை அளந்து இருந்தார்.

ஆனால் வீட்டின் சுவர்களோ மிக உயரமானவை. வீட்டுக்குள்ளே இரத்தம் காணப்பட்டு இருக்கின்றது. இதனால் பொலிஸாருக்கு சட்டத்தரணியின் ஆசை நாயகி மீதுதான் சந்தேகம். எனவே கைது செய்து விட்டனர்.

இந்நிலையில் பொலிஸாரின் தொடர் விசாரணையில் இவர் உண்மையை சொல்ல நேர்ந்து விட்டது. இவரை சட்டத்தரணி ஒரு கைதி போலவே நடத்தி வந்திருக்கின்றார் என்றும் எங்கு போனாலும் கூடவே வந்து விடுவார் என்றும் இருவரும் அன்றாடம் உணவகத்தில் இருந்துதான் சாப்பாடு எடுக்கின்றமை வழக்கம் என்றும் வாக்குமூலத்தில் கூறி உள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top