புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பெற்ற குழந்தையை கொலை செய்து பெயிண்ட் டின்னுக்குள் அடைத்து வைத்த தாயால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டம் அரியமங்கலத்தில் உள்ள இக்பால் தெருவை சேர்ந்தவர் சவுக்கத்அலி. இவர் ஒரு மரக்கடை பணியாளர். இவரது மனைவி பாத்திமா
மரியம்(21). இவர்களுக்கு நூருல்ஷியா என்ற ஒன்றரை வயது பெண் குழந்தை இருந்தது. அரியமங்கலத்தில் உள்ள தனி வீட்டில் இவர்கள் வசித்து வந்தனர்.

இந்த நிலையி்ல் பாத்திமா மரியம் செல்போன் மூலம், பல நபர்களுடன் பேசி வந்துள்ளார். இதை அறிந்த கணவர் சவுக்கத் அலி, மனைவியை கண்டித்துள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த பாத்திமா மரியம், கடந்த 5.3.2012 அன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் குழந்தை நூருல்ஷியாவை கொடூரமான முறையில் கொன்றார்.

அதன் பிறகு குழந்தையின் உடலை வீட்டில் இருந்த பெயிண்ட் டின்னுக்குள் அடித்து வைத்து விட்டு தப்பியோடி விட்டார்.

சம்பவத்தன்று வேலை முடிந்து வீடு திரும்பிய சவுக்கத் அலி நடந்த சம்பவங்களை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். மேலும் தனது மனைவி தப்பியோடியது குறித்து, அரியமங்கலம் பொலிசாரிடம் புகார் அளித்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த பொலிசார், குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தலைமறைவாக இருந்த பாத்திமா மரியத்தை பிடிக்க, பொன்மலை பொலிஸ் உதவி கமிஷனர் சீனிவாசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை பொலிசாரின் விசாரணையில், கும்பகோணத்தில் தலைமறைவாக இருந்த பாத்திமா மரியம் சிக்கினார். அவரை கைது செய்த பொலிசார், திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் பெரும் பரபரப்பை இவ்வழக்கின் விசாரணை திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முடிந்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதில் பெற்ற குழந்தையை கொன்று பெயிண்ட் டின்னுக்குள் அடைத்து வைத்துவிட்டு தலைமறைவான தாய் பார்த்திமா மரியத்துக்கு ஆயுள் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top