பாம்பிடம் கடி வாங்கிய தாய், குழந்தைக்கு பால் கொடுத்ததால் விஷம் பரவி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம், வீரணாமூர் காலனியைச் சேர்ந்த மோகனின் மனைவி சாரதாவுக்கு 32, மூன்று குழந்தைகள் உள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு 12 மணிக்கு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சாரதா தன்னை ஏதோ கடிப்பதை உணர்ந்து திடுக்கிட்டு எழுந்துள்ளார்.மின்சாரம் தடைபட்டிருந்த அந்நேரத்தில் தன் ஒரு வயது குழந்தை சபரி அழுததால் வீட்டிற்கு வெளியே சென்ற சாரதா குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துள்ளார்.
சிறிது நேரத்தில் மின்சாரம் வந்ததும் சாரதா மற்றும் உறவினர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது 4 அடி நீளமுள்ள "நல்ல பாம்பு" இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பாம்பு கடித்ததால் சாரதாவிற்கு மயக்கம் ஏற்பட்டது. அவருக்கு பச்சிலை வைத்தியம் பார்க்கப்பட்ட பின்னர் வீட்டிற்கு திரும்பினார்.
அங்கு தாய்ப்பால் குடித்துவிட்டு தூங்கிக் கொண்டிருந்த குழந்தை சபரிக்கு விஷம் பரவியதையடுத்து தூக்கத்திலேயே இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதனால் மீண்டும் மயங்கி விழுந்த சாரதாவை உயிருக்கு ஆபத்தான நிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது சாரதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
0 கருத்து:
கருத்துரையிடுக