புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


மனைவியை கொலை செய்து சூட்கேசில் வைத்து ஆற்றில் எரிந்த நபருக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கனடாவை சேர்ந்த ஜேம்ஸ்(வயது 27) என்பவரின் மனைவி லான்சி கடந்தாண்டு ஜீலை மாதம் காணாமல் போனார். இது
குறித்து பொலிசார் ஜேம்சிடம் விசாரணை நடத்திய போது, பதில் தெளிவானதாக இல்லை.

அதன் பிறகு ஒரு மாதம் கழித்து ரிச்மாண்ட் அருகே பிரேசர் நதிக்கரையில் ஒரு சூட்கேசுக்குள் பெண்ணின் பிணம் இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து நடத்திய சோதனையில் அப்பிணம் காணாமல் போன லான்சி உடையது என்பதும், லான்சியை கொலை செய்து ஆற்றில் போட்டது அவருடைய கணவர் ஜேம்ஸ் என்பதுவும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் அவருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top