புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


15 வயது மகனை 26 வயதான பெண் ஒருவருக்கு மணம் முடித்துக் கொடுக்குமாறு சிறுவனின் பெற்றொர், பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளன.


இந்த விசித்திரமான கோரிக்கை அத்துருகிரிய பொலிஸாரிடம் முன்வைக்கப்பட்டது.

அத்துருகிரிய பிரதேசத்தில் வாழும் 15 வயதான தமது மகன், மாலம்பெ பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதான பெண் ஒருவருடன் குடும்பம் நடத்தி வருவதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

எனவே இவர்கள் இருவரையும் சட்ட ரீதியான இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாரிடம் கோரியுள்ளனர்.

குறித்த பெண் ஏற்கனவே விவாகமாகியுள்ளதாகவும், கணவர் குறித்த பெண்ணை கைவிட்டுச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

15 வயது சிறுவனை மணம் முடிப்பதற்கு பெண்ணின் பெற்றோர் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

இந்நடவடிக்கை இலங்கை கலாச்சாரத்திற்கு பொருத்தமற்றது எனவும், சிறுவனை விடவும் வயது கூடிய பெண் ஒருவருடன் திருமண பந்தத்தில் இணைப்பதற்கு சட்டத்தில் இடமில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான முறைப்பாடுகளை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு வர வேண்டாம் என அத்துருகிரிய சிறு முறைப்பாட்டுப் பிரிவு பொறுப்பதிகாரி ஜே.ஏ. கிறிஸ்டோபர் முறைப்பாடு செய்த தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top