மூன்று மாதங்களின் பின்னர் யாழ்பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் நேற்றைய தினம் மீண்டும் ஆரம்பமாகி இருந்தன.நேற்றைய தினம் கலைப்பிரிவு மாணவர்கள் கல்வி செயற்பாடுகளில் பங்கேற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் நளைய தினம் முதல் விவசாயம் மற்றும் முகாமைத்துவ பீடங்களின் கல்வி செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும் என்றும், அந்த பீடத்தின் மாணவர்கள் நாளைய தினம் பல்கலைக்கழகத்துக்கு சமூகமளிக்குமாறும் கோரப்பட்டுள்ளது.
இதேவேளை யாழ் பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் காண்டீபன் நேற்றைய தினம் கொழும்பில் உள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ் பல்கலைக்கழகத்தின் கல்வி செயற்பாடுகளை ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடும் நோக்கிலேயே அவர் அழைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன் விஞ்ஞான பீடம் எதிர்வரும் 22ம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது.
பல்கலைக்கழகத்தின் ஏனைய பீடங்களை ஆரம்பிப்பது தொடர்பில் விரைவில் தீர்மானிக்கப்படும்.
0 கருத்து:
கருத்துரையிடுக