புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


காதலியுடன் தனிமையில் இருந்த ரயில்வே டிக்கெட் பரிசோதகரை கத்தியால் குத்தி இளம்பெண்ணை பலாத்காரம் செய்த 3 வாலிபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


கர்நாடக மாநிலம் பங்காருப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் முனிராஜு (28), ரயில்வே டிக்கெட் பரிசோதகர். இவரும் கோலார் தங்கவயலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. படிக்கும் ரஞ்சிதா (21) என்பவரும் காதலித்துள்ளனர்.

காதல் ஜோடி நேற்று காரில் சித்தூர் மாவட்டம் பலமனேர் அருகே உள்ள கைகள் நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா வந்தது. ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சென்று பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு போதையில் வந்த 3 வாலிபர்கள் காதல் ஜோடியிடம் தகராறு செய்தனர். இதனால் காதல் ஜோடிக்கும் வாலிபர்களுக்கும் தகராறு முற்றியது. ஆத்திரமடைந்த அந்த வாலிபர்கள், தாங்கள் வைத்திருந்த கத்தியால் காதலர்களை தாக்கினர்.

இதில் முனிராஜு படுகாயமடைந்தார். அதன்பின் காதலனின் கண்முன்னே ரஞ்சிதாவை பாலியல் பலாத்காரம் செய்தனராம். பின்னர் ரஞ்சிதாவிடம் இருந்த நகைகளை பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டனர்.

இதையடுத்து ரஞ்சிதா அங்கிருந்து சாலைக்கு ஓடிவந்து அவ்வழியாக சென்றவர்களிடம் நடந்த விவரங்களை கண்ணீருடன் கூறியுள்ளார். அவர்கள் ஓடிவந்து முனிராஜுவை மீட்டு வி.கோட்டா அரசு மருத்துவமனையில் சேர்த்துவிட்டு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் ரஞ்சிதாவையும், முனிராஜையும் மேல் சிகிச்சைக்காக குப்பத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ரஞ்சிதாவிடம் நடத்திய விசாரணையில் கைகள் நீர்வீழ்ச்சிக்கு வந்த வாலிபர்கள் கன்னட மொழியில் பேசியதாகவும், அனைவரும் 23 வயது முதல் 28 வயதுக்குள் இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் குற்றவாளிகளைப் பிடிக்க 2 தனிப்படை அமைத்துள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top