அம்பாறை – பொத்துவில் பிரதேசத்தில் மூன்று பாரவூர்திகளுக்கு இடையில் சிக்குண்டு 6 வயதுடைய சிறுமி ஒருவர் பலியான துரதிஷ்ட சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று பிற்பகல் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சிறுமி பாதையை கடக்க முயற்சித்த வேளை, முன்னால் வந்த பாரவூர்தி ஒன்றுடன் மோதுண்ட அவர், பின்னர் அடுத்தடுத்து பயணித்த இரண்டு பாரவூர்திகளுக்கு இடையில் சிக்குண்டதாக விபத்தினைக் கண்ணுற்ற மக்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
சதோசவிற்கு சொந்தமான குறித்த பாரவூர்திகளில் நெல் ஏற்றிச் செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் குறித்த மூன்று பாரவூர்திகளது சாரதிகளும் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொத்துவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக