புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இங்கிலாந்தில் தனது காதலரை 90 முறை கத்திரிக்கோலால் குத்தி, கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் ஒரு பெண்.இங்கிலாந்தின் வடக்கு ஸடபோர்ட்ஷயர் என்ற பகுதியில் வசித்து வந்தவர் கரேன் கிளிம்ப்சன்(வயது 46). இவரது காதலரின் பெயர்
மார்க் சான்ட்லர்(வயது 42).

கரேனுக்கு ஏற்கனவே திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவர் சாண்ட்லருடன் 18 வருடங்களாக சேர்ந்த வாழ்ந்து வருகிறார்.

இதற்கிடையே கடந்த ஜனவரி மாதம் இருவரது உடல்களும் வீட்டில் அழுகிய நிலையில் மீட்கப்பட்டன.

இதனை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், கரேன் தான் சான்ட்லரை கொன்றுள்ளதாகவும், பின்னர் தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரியவந்துள்ளது.

சான்ட்லருடன் ஏதோ ஒரு காரணத்திற்காக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ள கரேன், அப்போது ஏற்பட்ட கோபத்தில் கத்திரிக்கோல்களை எடுத்து சான்ட்லரை குத்தியுள்ளார்.

அவர் தப்புவதற்காக மாடியிலிருந்து கீழே இறங்கி ஓடி வந்துள்ளார். ஆனால் விடாமல் துரத்தி வந்த கரேன், சான்ட்லர் உடல் முழுவதிலும் கத்திரிக்கோல்களால் குத்தியுள்ளார்.


பின்னர் சமையலறைக்கு சென்று, அங்கிருந்த கத்தியை எடுத்து கொண்டு கழிவறைக்கு சென்றுள்ளார்.

அங்கு தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று தடயவியல் நிபுணர்களின் அறிக்கை கூறுகிறது.

மேலும் சான்ட்லரின் உடலில் 90 இடங்களில் கத்திரிக்கோல் குத்து காயம் இருப்பதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top