தாய்மொழியை காட்டிலும், தமிழ் மொழி தான் தன்னை தாங்கிப் பிடிக்கும் என்ற நம்பிக்கையில், மலையாளக் கரையில் இருந்து, கோடம்பாக்கம் கோதாவில் குதித்த பூர்ணா, ஜொலிக்கும் அழகும், துள்ளலான இளமையும் இருந்தும் கூட, இன்னும் போராடிக் கொண்டு தான்
இருக்கிறார். “எனக்கு என்ன குறைச்சல்… ஏன் படங்கள் அமைய மாட்டேங்குது? என, கண்ணில் படுபவர்களிடம் எல்லாம் புலம்பி தீர்த்துவிட்டார்.
ஒருவழியாக, காதல் “கிசுகிசுக்கள் தான், தன் முன்னேற்றத்துக்கு குறுக்கே நிற்கிறது என்ற உண்மையை, கண்டுபிடித்து விட்ட பூர்ணா, இப்போது படப்படிப்பு நேரங்களில், யாருடனும் பேசாமல், ஒதுங்கியே இருக்கிறார். “முன்பெல்லாம், பூர்ணா இருந்தால், படப்பிடிப்பு தளமே, கேலியும், கிண்டலுமாக, கலகலப்பாக இருக்கும். இப்ப ரொம்பவும், “டல் அடிக்குது என, புலம்புகின்றனர், சக நடிகர்கள்.
0 கருத்து:
கருத்துரையிடுக