புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இத்தாலியில் இன்று அதிகாலை 1.05 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.இதனால் தெற்கு இத்தாலியில் உள்ள கோசென்ஷா மற்றும் மோர் மன்னோ நகரிலும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் வீடுகளும், கட்டிடங்களும் குலுங்கின.


இதனால், அயர்ந்து தூங்கி கொண்டிருந்த மக்கள் அலறியடித்தபடி எழுந்தனர்.

வீடுகளை விட்டு தெருக்களில் விடிய விடிய தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கம் கலாபிரியா மற்றும் பேசிலிகேடா எல்லையில் உள்ள கொசென்ஷாவின் போலின்னோ மலை பகுதியை மையமாக கொண்டு ஏற்பட்டது.

5.3 ரிக்டர் அளவில் பதிவாகியிருந்த நிலநடுக்கத்தின் அதிர்ச்சியால் 84 வயது முதியவர் ஒருவர் மாரடைப்பில் இருந்தார்.

இந்த நில நடுக்கத்தால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் பெரிய அளவில் சேதம் அடைந்ததாக தகவல் இல்லை.

ஆனால், மோர் மன்னோ நகரில் ஒரு மருத்துவமனையில் கட்டிடத்தில் பல இடங்களில் கீறல் ஏற்பட்டது. இதனால் அங்கு தங்கி சிகிச்சை பெற்ற நோயாளிகள் பீதி அடைந்தனர்.

எனவே, அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். இதற்கிடையே சேதவிவரங்களை பொலிசாரும், தீயணைப்பு படையினரும் சேகரித்து வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top