மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வந்தாறுமூலை பலாச்சோலை கிராமத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்ட குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் நேற்று வியாழக்கிழமை மாலை பொலிஸாரால் மீட்கப்பட்டது.
நீதவான் நீதிமன்ற நீதிபதியின் அனுமதியுடன் பிரதேச தீடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் சகிதம் ஸ்தலத்துக்கு விரைந்து பொலிஸார் தூக்கில் தொங்கிய சடலத்தை மீட்டனர்.
தற்கொலை செய்து கொண்டவர் பலாச்சோலையைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான தியாகராசா சதீஸ்வரன் (33 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளார். நைலோன் கயிற்றைக் கட்டி களுத்தில் சுருக்கிட்டு இவர் தொங்கியுள்ளார்.
சடலம் பிரேத பிரசோதனைக்காக செங்கலடி மாவட்ட வைத்தியசாலைக்கு நேற்று எடுத்து வரப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. இன்று சடலம் பரிசோதிக்கப்பட்டு உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது. ஏறாவூர் பொலிஸார் இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை செய்து கொண்டவரின் மனைவி கடந்த மூன்று மாதங்களாக மத்திய கிழக்கிற்கு வீட்டுப் பணிப்பெண்ணாக சென்றுள்ள அதேவேளை தொடர்புகள் ஏதுமின்றி இருந்ததால் அவர் மனமுடைந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

0 கருத்து:
கருத்துரையிடுக