செயிண்ட் கேலன்(Saint Gallen) மாநிலத்தில் உள்ள வில்(Wil) என்ற ஊரில் கடையின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த மூன்று வயது சிறுமி மீது வான் மோதியது.இந்த விபத்தில் படுகாயமடைந்த சிறுமி மருத்துவ மனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கடைக்கு சரக்கு இறக்க வந்த வானின் டிரைவர், சரக்கு கை இறக்கி முடித்ததும் வண்டியை எடுத்துள்ளார். வண்டியின் முன்பு விளையாடிய சிறுமி சக்கரத்துக்கு இடையே நசுங்கி உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்தை நேரில் பார்த்த கடைக்காரர் இச்சம்பவத்தை விளக்கினார். வானுக்கு அருகிலேயே இருந்த பெற்றோர் குழந்தை வண்டிக்குள் சிக்கியதை அறிந்ததும் அலறினர், சம்பவத்தை நேரில் பார்த்த குழந்தையின் தாயார் அந்த இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார்.
காவலர், 37 வயது வான் ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக