பாடசாலைச் சிறுமியான மகளுக்கு சாராயம் கொடுத்து வந்த குற்றச்சாட்டில் மீகஹதென்னவில் பம்பரெல்லவைச் சேர்ந்த பெற்றோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு உள்ளார்கள்.
அயலவர்கள் மூலம் கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலை அடுத்து இக்கைது இடம்பெற்று உள்ளது. குடிப் பழக்கத்துக்கு பெற்றோர் அடிமையானவர்கள் என்றும் இவருக்கும் குடிக்கக் கொடுத்து வந்து இருக்கின்றார்கள் என்றும் பொலிஸாருக்கு சிறுமி வாக்குமூலம் கொடுத்து உள்ளார்.
பெற்றோர் மத்துகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராக்கப்பட்டு இந்நீதிமன்ற உத்தரவின் பேரில் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் போடப்பட்டு உள்ளார்கள்.
0 கருத்து:
கருத்துரையிடுக