புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

வடமராட்சி கிழக்கில் உள்ள செம்பியன்பற்று அரச தமிழ் கலவன் பாடசாலை அதிபர் வீ. இரவீந்திரன் யாழ். பல்கலைக்கழக மாணவன் ஒருவரால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு உள்ளார்.


பாடசாலையில் மாணவி ஒருத்தியை அதிபர் கண்டித்து இருக்கின்றார். இதனால் மாணவியின் சகோதரன் கோபம் அடைந்து அதிபரின் அலுவலகத்துக்குள் அத்துமீறி பிரவேசித்து இருக்கின்றார்.

இவரின் கைகளில் குடை இருந்தது. குடையால் அதிபரின் தலையில் பல முறை அடித்து இருக்கின்றார்.

இதனால் அதிபரின் மூக்குக் கண்ணாடி உடைந்து விட்டது.தலையில் காயங்கள் ஏற்பட்டு விட்டன. கண்களிலும் பாதிப்பு.

பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொலிஸாருக்கு உடனடியாக முறைப்பாடு மேற்கொண்டார் அதிபர். அதிபர் மந்திகை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு உள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top