களுத்துறை பிரதேசத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டவர் இரண்டு வாரங்களின் பின்னர் வீடு திரும்பினார்?
களுத்துறை பிரதேசத்தில் நல்லடக்கம் செய்யப்பட்ட நபர் ஒருவர் இரண்டு வாரங்களின் பின்னர் வீடு திரும்பியுள்ளார்.களுத்துறை வைத்தியசாலையின் பிரேத அறையில் இருந்த சடலமொன்றை தமது தந்தையின் சடலம் என பிள்ளைகள் அடையாளம் கண்டு, அதனைப்
பொறுப்பேற்று இறுதிக் கிரியைகள் செய்துள்ளனர்.
நல்லடக்கம் செய்து இரண்டு வாரங்களின் பின்னர் குறித்த நபர் உயிருடன் வீடு திரும்பியுள்ளார். குறித்த நபர் களுத்துறை, கட்டுகுருந்த கரையோரத்தில் முன்னர் வாழ்ந்து வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
சுனாமி அனர்த்தத்தை தொடர்ந்து லாகொஸ்வத்த என்னும் பிரதேசத்தில் குறித்த நபருக்கு வீடு அமைத்துக் கொடுக்கப்பட்டது. வேலைக்குச் செல்வதாகத் தெரிவித்து சென்ற தந்தையை சில நாட்களாக காணாதைத் தொடர்ந்து அவரது பிள்ளைகள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதேவேளை, சுனாமியினால் அழிவடைந்த தமது பழைய வீட்டுக்கு அருகாமையில் நஞ்சருந்தி நபர் ஒருவர் ஆபத்தான நிலையில் களுத்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பிள்ளைகளுக்கு தகவல் கிடைக்கப் பெற்றது.
தமது பழைய வீட்டிற்கு அருகாமையில் நஞ்சருந்தி உயிரிழந்தவர் தமது தந்தையாகவே இருக்கும் எனக் கருதிய பிள்ளைகள், சடலத்தைப் பொறுப்பேற்று இறுதிக் கிரியைகளை மேற்கொண்டுள்ளனர்.
இறுதிக் கிரியைகள் மேற்கொள்ளப்பட்டு இரண்டு வாரங்களின் பின்னர் ஊர் திரும்பிய நபர், தமது படம் ஒட்டப்பட்ட மரண அறிவித்தல்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். உறவினர் வீடொன்றுக்கு சென்றிருந்ததாக குறித்த நபர் தெரிவித்துள்ளார்.
0 கருத்து:
கருத்துரையிடுக