புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ராஜஸ்தானை சேர்ந்த சிறுமியை கடத்தி, பலாத்காரம் செய்த காஷ்மீர் வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 17 வயது சிறுமி ரீனா (பெயர் மாற்றம்). இவருக்கு பேஸ்புக் வலைதளம் மூலம்
காஷ்மீர் மாநிலம் ஜம்முவை சேர்ந்த விஷால் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது.

விஷால், போன் பூத் வைத்துள்ளார். நீண்ட நாட்களாக இருவரும் வலை தளத்தில் பழகினர். பின்னர் தன்னை நேரில் பார்க்க வரும்படி விஷால் அழைத்தார். இதையடுத்து நேற்றுமுன்தினம் ரீனா, ஜம்மு வந்தார்.

இருவரும் வைஷ்ணவி தேவி கோயிலுக்கு செல்லலாம் என கூறி ரீனாவை விஷால் அழைத்து சென்றார். விஷாலின் நண்பர்கள் 2 பேரும் உடன் சென்றனர். கோயிலுக்கு செல்லாமல் வேறு வழியாக சென்றனர்.

ஒரு ஒதுக்குபுறமான இடத்தில் காரை நிறுத்தினர்.

3 வாலிபர்களும் சேர்ந்து ரீனாவை பலாத்காரம் செய்தனர். பிறகு காரில் ரீனாவுடன் உதம்பூர் நோக்கி சென்றனர். குட் பகுதியில் போலீசார் எதேச்சையாக காரை மறித்தனர். காரில் இருந்து இறங்கிய 3 பேரும் தப்பி ஓடி விட்டனர்.

தனக்கு நடந்த கொடுமையை ரீனா போலீசிடம் கூறினாள். இதையடுத்து ராஜஸ்தானில் இருக்கும் ரீனாவின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர்.

இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விஷால் மற்றும் அவரது நண்பர்கள் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top