புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஜேர்மனியின் பல பகுதிகளில் ஒரே நாளில் குளிர் திடீரெனப் பரவியதையடுத்து பனிப்பொழிவும் அதிகரித்தது.மத்தியப் பகுதி மற்றும் தென் பகுதிகளில் குளிர் 0 டிகிரிக்கும் குறைவாக இருந்தது.


கடந்த பத்தாண்டுகளுக்குப் பின்பு இப்போது தான் ஜேர்மனியில் ஒக்ரோபர் மாதத்தில் குளிர்காலம் தொடங்கி இருக்கிறது.

பவேரியா, சேக்ஸனி, ரைன்லாந்து - பேலட் டினேட், ஹெஸ்ஸி மற்றும் சார்லாந்தில் கடுமையான பனிப்பொழிவு காணப்படுகிறது.

நேற்று லீப்சிக், டிரெஸ்டென் மற்றும் மியூனிச்சில் பனி பெய்யத் தொடங்கும் என்று ஜேர்மனியின் தட்பவெப்ப மையம் தெரிவித்தது.

இத்தகைய திடீர் பனிப்பொழிவு முப்பது, நாற்பது வருடங்களுக்கு ஒரு முறை காணப்படும் என்று Deutscher Wetterdienst(DWD)யின் கிறிஸ்டோஃப் ஹார்ட்மன் தெரிவித்தார்.

ஒரே வாரத்தில் வெப்பம் 20 டிகிரி குறைந்தது மிக மிக அபூர்வமானதாகும் என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையே லீப்சிக், மியூனிச் நகரங்களுக்கு இடையில் உள்ள ரயில் தடங்களில் மரங்கள் உடைந்து விழுந்து கிடப்பதால் ரயில் போக்குவரத்து தடைபட்டது.

மேலும் நேற்றிரவில் -1டிகிரி முதல் -6டிகிரி வரை குளிர் இருந்தது என தட்பவெப்ப மையம் தெரிவித்தது.

நேற்றிரவில் ஆல்ப்ஸ் மலையில் 10 முதல் 15 செ.மீ. உயரத்துக்கு பனிபடர்ந்திருந்ததாகவும் வெப்பநிலை - 10 டிகிரி வரை நிலவியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top