அர்ஜென்டினா பெண் ஒருவர் 12 ஆண்டுகளுக்கு முன்பு பதப்படுத்தி வைக்கப்பட்ட கருமுட்டை மூலம் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்
12 ஆண்டுகளுக்கு முன்பு பதப்படுத்தி வைக்கப்பட்ட கருமுட்டை மூலம் அர்ஜென்டினா பெண் ஒருவர் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.அர்ஜென்டினா நாட்டின் தலைநகரான பியூனஸ் ஏர்ஸைச் சேர்ந்தவர் மோனிகா ஜபோடாக்ஸ்னி(வயது 45). அவரது
கணவர் கில்லர்மோ ஹூசக்.
இயற்கையாக கருத்தரிக்க முடியாத மோனிகா செயற்கை முறை மூலம் கருத்தரிக்க முயன்று பல தடவை தோல்வியையே சந்தித்தார்.
அப்போது கடைசியாக ஒருமுறை முயற்சி செய்து பார்ப்போம் என்று எண்ணிய மோனிகா, 12 ஆண்டுகளுக்கு முன்பு பதப்படுத்தி வைத்திருந்த கருமுட்டையை கடந்தாண்டு பயன்படுத்தி உள்ளார்.
இதனையடுத்து கடந்த ஜனவரி மாதம் அறுவை சிகிச்சை மூலம் மெர்சிடீஸ், குவாடலூப் என்னும் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.
இதற்கு முன்பு அதிகபட்சமாக 7 ஆண்டுகள் பதப்படுத்தப்பட்ட கருமுட்டையில் இருந்து தான் குழந்தை பிறந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்டுகள் ஆக ஆக கருமுட்டை சேதமடையலாம் என்னும் நிலைமையில் மோனிகா 12 ஆண்டுகள் பதப்படுத்தப்பட்ட கருமுட்டையில் இருந்து இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்து:
கருத்துரையிடுக