புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

நூறு ரூபாய்க்கு பச்சிளம் குழந்தையை விற்ற தாயையும், விற்கப்பட்ட குழந்தையுடன் பேருந்து நிலையத்தில் சுற்றி திரிந்த பெண்ணையும் போலீசார் கைது செய்தனர்.


கோயம்பேடு மாநகர பேருந்து நிலைய வளாகத்தில், நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு, பச்சிளம் பெண் குழந்தையுடன், பெண் ஒருவர் திரிந்தார்.
 சந்தேகமடைந்த பேருந்து நிலைய போலீசார், அவரிடம் விசாரித்ததில், அவர் பெயர் முனியம்மாள், 24, மூலக்கடை, காமராஜர் சாலை பகுதியில் வசிப்பவர். குழந்தையுடன், கொடுங்கையூர் செல்ல உள்ளார் என, தெரியவந்தது.

சந்தேகம் தீராத போலீசார், அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். அதில் பல விவரங்கள் தெரியவந்தன.

கடந்த மாதம், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், முனியம்மாளின் சகோதரி மகன் சிகிச்சை பெற்ற போது, மருத்துவமனைக்கு அவர் சென்றார். அப்போது, அங்கு சிகிச்சை பெற்று வந்த செல்வி, 30 என்பவருக்கு, பெண் குழந்தை பிறந்தது. செல்வியுடன், முனியம்மாளுக்கு நட்பு ஏற்பட்டது.

அப்போது செல்வி தனது கணவர் இறந்த செய்தியையும், வேறொருவருடன் ஏற்பட்ட தொடர்பால் குழந்தை பிறந்ததையும், வயது வந்த பெண் வீட்டிலிருக்கும் நிலையில் இக்குழந்தையை நான் எப்படி வளர்ப்பேன், அசிங்கமாக இருக்குமே என முனியம்மாவிடம் புலம்பினார்.

இந்நிலையில் கடந்த 12ம் தேதி முனியம்மா, 100 ரூபாயை செலவுக்கு வைத்து கொள் என கூறிவிட்டு, செல்வியிடமிருந்து குழந்தையை வாங்கினார். குழந்தையை காட்டி பிச்சை எடுத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு கோயம்பேடு பஸ் நிலையத்தில் குழந்தையை வைத்து முனியம்மா பிச்சையெடுத்து கொண்டிருப்பதை அறிந்த கோயம்பேடு இன்ஸ்பெக்டர் ஷான் வின்சென்ட், அவரை பிடித்து விசாரித்தார்.

இதில் செல்வியிடம் குழந்தையை வாங்கியதை ஒப்புக்கொண்டார். அவரிடமிருந்து குழந்தையை மீட்டு செனாய் நகரில் உள்ள சைல்டு லைனில் போலீசார் ஒப்படைத்துள்ளனர்.

குழந்தையை வேறோருவருக்கு விற்றதற்காக செல்வியையும், பிச்சையெடுக்க பயன்படுத்தியதற்காக முனியம்மாவையும் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top