புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


தாயின் கள்ளக் காதலனால் அசிட் வீச்சுக்குள்ளாகி 19 வயது யுவதி மற்றும் அசிட் வீசியவரும் கடும் காயங்களுக்குள்ளான நிலையில் கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அலதெனிய பிரதேசத்தில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கணவனை இழந்த குறித்த பெண் அப் பிரதேசத்தை சேர்ந்த ஒருவருடன் தொடர்பு வைத்திருந்துள்ளார். இப் பெண்ணின் மகளான 19 வயதுடைய யுவதி ஆடை தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார்.

பின்னர் தாயின் கள்ளக் காதலன் ஆரம்பித்து நடத்தும் வர்த்தக நியைம் ஒன்றில் வேலைக்கு தாயும் மகளும் அழைக்கப்பட்டுள்ளனர். அங்கு இவரும் தங்கி இருக்கும் போது தாயின் கள்ளக் காதலன் மற்றுமொரு திருமணம் செய்து கொண்டுள்ளது தெரிய வந்துள்ளது.

அன்று முதல் தாயும் மகளும் அவருடன் வாக்குவாதங்களில் ஈடுபட்டுள்ளனர். இதன் விளைவாக தாயின் கணவர் 19 வயதுடைய யுவதிக்கு அசிட் வீசியுள்ளதுடன் கடும் காயம் ஏற்பட்டுள்ளது.

அதே நேரம் அசிட் வீசப்பட்டதாக கூறப்படும் தாயின் கள்ளக் காதலனும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன் இருவரும் கண்டி போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top