தனது கணவருடன் சிரித்து பேசி கொண்டிருந்த பெண்ணின் முகத்தில் கண்ணாடியால் தாக்கி காயப்படுத்திய மனைவிக்கு 5 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் கிளவ்செஸ்டர் பகுதியைச் சேர்ந்தவர் நதாஷா ஹவ்(வயது 31). இவரது கணவர், அமி ப்ளூக் என்ற பெண்ணுடன், ஒரு நைட் கிளப் பாரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த நதாஷா, தனது கணவருடன் அமி சிரித்து சிரித்துப் பேசியபடி இருப்பதைப் பார்த்து கோபமடைந்தார். தனது கணவரை அமி வளைத்துப் போட்டு விட்டாரோ என்று பயந்து போனார்.
உடனே வேகமாக அமியை நெருங்கிய அவர் அங்கிருந்த கண்ணாடி கிளாஸை எடுத்து அமி முகத்தில் ஓங்கி அடித்தார். இதில் அமி அலறியபடி கீழே விழுந்தார்.
அப்படியும் நிறுத்தாத நதாஷா, அமியின் தலை முடியைப் பிடித்து இழுத்து சுவரில் மோதினார். இதில் அமியின் முகத்தில் பலத்த ரத்தக் காயம் ஏற்பட்டு, வலியால் அலறித் துடித்தார்.
இதைப் பார்த்து அருகில் இருந்தோர் வேகமாக ஓடி வந்து நதாஷாவைத் தடுத்துப் பிடித்தனர். உடனே அமியை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட பொலிஸார் நதாஷாவைக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தினர். நீதிமன்றத்தில் நடந்த விசாரணைக்குப் பின்னர் நதாஷாவுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
ஏற்கனவே 2001ம் ஆண்டு வேகமாக கார் ஓட்டியதாக நதாஷா மீது பொலிஸார் வழக்குப் பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்து:
கருத்துரையிடுக