புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


தற்போதைய இணைய உலகில் உலாவிகளின் பங்கு அளப்பரியதாகும். இதற்காகவே பல நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு வெவ்வேறு புதிய வசதிகளை உள்ளடக்கிய உலாவிகளை அறிமுகப்படுத்தியிருக்கின்றன.

அத்துடன் நின்றுவிடாது மேலும் இலகுவானதும், கவர்ச்சிகரமானதுமான இணையத் தேடல்கள் மற்றும் சேவை விரிவாக்கம் என்பனவற்றிற்காக ஒவ்வொரு உலாவிகளிற்குமென தனியான நீட்சிகள், Add-On போன்றவை காணப்படுகின்றன.

எனினும் இவற்றிலும் தரங்குறைந்தவை, தேவைக்கு அப்பாற்பட்டவை மற்றும் கணனிக்கு இடையூறு விளைவிக்கும் வைரஸ் புரோகிராம்களை உள்ளடக்கியதாகவும் காணப்படுகின்றன.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் உங்கள் கணனியிலுள்ள உாலவியில் நிறுவப்பட்டிருக்கும் தேவையற்ற நீட்சிகள் மற்றும் Add-On போன்றவற்றை நீக்குவதற்கு Toolbar Cleaner எனும் மென்பொருள் உதவி புரிகின்றது.

இம்மென்பொருளின் உதவியுடன் Internet Explorer, Chrome மற்றும் Firefox உலாவிகளிலுள்ள வேண்டப்படாத நீட்சிகளை நீக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

தரவிறக்கம் செய்ய

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top