புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

கல்முனையில் 400 ரூபா கொடுக்கல் வாங்கல் தகராறு காரணமாக ஒருவர் கத்திக் குத்துக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதேவேளை ஒருவரது வீடு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.


கல்முனை - சாய்ந்தமருது, சாயிரா கல்லூரிய வீதியில் உள்ள அயலவர்கள் இருவர் 400 ரூபா கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டுள்ளனர்.

இக் கொடுக்கல் வாங்கல் காரணமாக அவர்களுக்கிடையில் தகராறு ஏற்படவே இருவரும்கத்தியால் குத்தி சண்டையிட்டுள்ளனர்.

இதன் போது ஒருவர் கத்திக் குத்திற்கு இலக்கான நிலையில் கல்முனை வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகிறது. கத்தியால் மற்றவரை குத்திய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று இரவு தகராறில் ஈடுபட்டு அயலவரை கத்தியால் குத்தியவருடைய வீடு, காரிற்கு இனந்தெரியாத நபர்கள் தீயிட்டுள்ளனர்.

இதன்போது அவரது வீடு முற்றுமுழுதாக தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கல்முனை தீயணைப்பு விரிவினரின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top