வீட்டில் தனியாக இருந்த பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தி, அங்கிருந்த பணம், பொருட்களை திருடி சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.மும்பையில் உள்ள பந்த்ரா பகுதியில்
இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பெண்ணொருவர் தங்கியிருந்து, இசை கற்று வருகிறார்.
இவருடன் மற்றொரு பெண்ணும் தங்கி உள்ளார். இந்நிலையில் நேற்று அதிகாலை குறித்த பெண் வீட்டில் தனியாக இருக்கும் போது, திருடன் ஒருவன் நுழைந்து அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார்.
பின்னர் வீட்டில் இருந்த ரூ.35,000 மதிப்புள்ள பொருட்களுடன் தப்பியோடிவிட்டான்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் 7 பேரை கைது செய்துள்ளனர். மேலும் அந்த பெண் கூறிய அடையாளங்களை வைத்து குற்றவாளியின் வரைபடத்தை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் கூறியதாக பொலிசார் கூறுகையில், 3வது மாடியில் உள்ள தனது வீட்டுக்குள் ஜன்னல் வழியாக திருடன் வந்தான் என்றும், அவன் தன் கழுத்தில் கத்தியை வைத்து கற்பழித்தான் என்றும், அதன் பிறகு வீட்டில் ஏதாவது விலை உயர்ந்த பொருட்கள் இருக்கிறதா என்று தேடினான் என்றும் தெரிவித்துள்ளார்.
0 கருத்து:
கருத்துரையிடுக