மேஷம்:
ரிஷபம்:
இன்று, உங்கள் மனம் தெளிந்த நீரோடை போல இருக்கும். உறவினர், நண்பர் உங்களிடம் சில பொறுப்பு தரலாம். தொழில், வியாபார வளர்ச்சிப்பணி சிறந்து இனிய அனுபவம் தரும். உபரி பணவருமானம் கிடைக்கும். விருந்து உபசரிப்பில் கலந்து கொள்வீர்கள். அரசு பணியாளர் பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம் பெறுவதில் அனுகூலம் உண்டு.
மிதுனம்:
இன்று, உங்கள் எண்ணத்திலும், செயலிலும் சிறுஅளவில் மாறுபட்ட தன்மை பிரதிபலிக்கும். அனுபவசாலியின் ஆலோசனை பெற்று செயல்படுவதால் பணிகள் சிறப்பாகும். தொழில், வியாபாரம் சீராக வளர கிடைக்கிற வாய்ப்புக்களை தவறாமல் பயன்படுத்த வேண்டும். பணவரவு பெறுவதில் இருந்த தாமதம் விலகும். மாமன், மைத்துனர் உங்களுக்கு தேவையான உதவியை மனமுவந்து வழங்குவர். வாகன பாதுகாப்பில் கூடுதல் கவனம் கொள்வது நல்லது.
கடகம்:
இன்று, உங்கள் செயல்களில் நியாய, தர்மத்தை அதிகம் பின்பற்றுவீர்கள். தாமதமான பணிகளில் வளர்ச்சி நிலை உருவாகும். தொழில், வியாபாரம் செழிக்க கூடுதல் மூலதனம் செய்வீர்கள். உற்பத்தி, விற்பனை சிறந்து ஆதாய பணவரவு கிடைக்கும். குடும்பத்துடன் உறவினர் இல்லம் சென்றுவர திட்டமிடுவீர்கள். அரசியல் வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி, பொறுப்பு கிடைக்கும்.
சிம்மம்:
இன்று, உங்களின் சுற்றுச்சூழ்நிலை அறிந்து பேசுவது நல்லது. செயல்கள் சிறப்பு பெற கூடுதல் சுறுசுறுப்பு தேவைப்படும். தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனத்துடன், கடின உழைப்பு தந்து முன்னேற்றம் பெற தயாராவீர்கள். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். குடும்பத்தின் முக்கிய செலவுகளை மட்டும் ஏற்றுக்கொள்வீர்கள். தியானம், தெய்வவழிபாடு செய்து மனதில் அமைதி பெறுவீர்கள்.
கன்னி:
இன்று, உங்கள் செயல்களில் நேர்த்தியும், திறமையும் பரிமளிக்கும். மனச்சாட்சிக்கு கூடுதல் முக்கியத்துவம் தந்து பணிபுரிவீர்கள். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை சிறந்து வாழ்க்கைத்தரம் உயரும். உபரி பணவருமானம் கிடைக்கும். வெகுநாள் வாங்க நினைத்த பொருள் வாங்குவீர்கள். உறவினர், நண்பர்களின் பாராட்டு கிடைக்கும்.
துலாம்:
இன்று, உங்கள் மனதில் கூடுதல் நம்பிக்கையும், தைரியமும் வளரும். நிறைவேற்ற வேண்டிய பணிகளை உத்வேகத்துடன் செய்து தகுந்த புகழ்பெறுவீர்கள். தொழில், வியாபார வளர்ச்சியில் புதிய சாதனை ஏற்படும். பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். சான்றோர்களின் ஆசி கிடைக்கும். அதிகாரிகள், பணியாளர்களை அன்புடன் வழி நடத்தி பணி இலக்கை திறம்பட நிறைவேற்றுவர். பேரும், புகழும் கிடைக்கும்.
விருச்சிகம்:
இன்று, உங்களின் நற்செயலை சிலர் குறை கூறி பேசுவர். அவர்களிடம் நேரத்தை செலவிடாமல் சொந்தப்பணிகளில் கவனம் கொள்வதால் அதிக நன்மை கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் கூடுதல் பணிச்சுமை உருவாகும். அளவான பணவரவு உண்டு. கண்களின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் வேண்டும். அரசியல்வாதிகள், விவகாரங்களில் சமரசம் பேச முயற்சிக்க வேண்டாம். –
தனுசு:
இன்று, உங்களுக்கு எதிர்மறையாக செயல்படுபவரை அடையாளம் கண்டு கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனை மனதுக்கு நம்பிக்கை தரும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற கூடுதல் பணிபுரிவது அவசியம். பணவரவை விட செலவு அதிகரிக்கும். அதிக பயன் தராத பொருட்களை விற்பனையாளரின் பகட்டான பேச்øகேட்டு வாங்க வேண்டாம். சீரான ஓய்வு உடல்நல ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.
மகரம்:
உங்களின் இனிய பேச்சால் வெகுநாள் திட்டமிட்ட முக்கியமான காரியம் ஒன்று நிறைவேறும். சமூகத்தில் பெறுகிற மதிப்பு, மரியாதை உயரும். தொழில், வியாபாரத்தில் அதிகப்பணி புரிந்து உற்பத்தி, விற்பனையில் புதிய சாதனை படைப்பீர்கள். தாராள பணவரவு கிடைக்கும். கூடுதல் சொத்து சேர்க்கை பெற அனுகூலம் வளரும். குடும்பத்தில் சுப நிகழ்வு உண்டாகும்.
கும்பம்:
இன்று, இனிய எண்ணங்களால் மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். எந்த செயலிலும் நிதானத்துடன் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபார வளர்ச்சியில் புதிய பரிமாணம் ஏற்படும். எதிர்பார்த்த பணவரவு திருப்திகரமாக கிடைக்கும். இல்லறத்துணை விரும்பிய பொருள் வாங்கித்தருவீர்கள். நிலுவை பணக்கடனில் ஒரு பகுதி செலுத்துவீர்கள்.
மீனம்:
இன்று, குணம் கெட்ட மனிதர் என்று விலகிய ஒருவரிடம் தவிர்க்க இயலாமல் பேசுகிற சூழ்நிலை உருவாகும். கண்ணியத்துடன் நடந்து கொள்வீர்கள். தொழில், வியாபாரம் வளர்ச்சிபெற இடையூறாக உள்ளவற்றை சரிசெயவீர்கள். முக்கிய பணவரவு பெறுவதில் தாமதம் இருக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றுவதால் பயண நடைமுறை எளிதாகும். பணியாளர், நிர்வாகத்தின் வழி காட்டுதலை கூடுதல் கவனத்துடன் பின்பற்றுவது நல்லது.
0 கருத்து:
கருத்துரையிடுக