புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


சிலருக்கு ஹார்மோன் காரணத்தினால், அதிகமாக முடி வளரும். அதனால் முகத்தில் எல்லாம் முடியானது வளர்ச்சி அடையும். சிலருக்கு மீசை இருப்பது போல கூட இருக்கும். ஆகவே உதட்டிற்கு மேல் உள்ள பகுதி கருமையான நிறத்தில்
காயப்படும். ஈஸியாக அந்த பிரச்சனையை சரிசெய்ய வீட்டிலேயே மருந்துகள் இருக்கின்றன.

* உதட்டிற்கு மேலே ஃபேஸ் ப்ளீச்சை தடவி, பின் சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இதனால் அதிலுள்ள பொருள் உடனடியாக கருமை நிறத்தை போக்கிவிடும்.

* உதட்டின் மேல் பகுதியை எலுமிச்சை, தேன் அல்லது தயிரால் நன்கு ப்ளீச் செய்து வந்தால், நாளடைவில் அந்த இடத்தில் உள்ள கருமை நீங்கிவிடும்.

* இல்லையெனில் பீட்ரூட் அல்லது மாதுளையின் ஜூஸை முகத்தில் தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்தால், முகத்தின் நிறம் சற்று அதிகரித்து, புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

* உதட்டிற்கு கெமிக்கல் கலந்த மிகவும் அடர்ந்த நிற லிப்ஸ்டிக், லிப் பாம் போடுவதை தவிர்ப்பது நல்லது. அதற்கு பதிலாக இயற்கை லிப் பாம்களான நெய், வெண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தினால், உதடு வறட்சி அடையாமல் இருக்கும்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top