புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

ஆந்திர மாநிலத்தில் விநோத நோயால் தாக்கப்பட்டு தினசரி ரத்தக்கண்ணீர் வடிக்கும் தன் மகனால் அவனது தாய் அவதிப்பட்டு வருகிறார்.ஆந்திரா, பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்த பத்மா என்ற பெண்ணுக்கு பிரம்மையா (வயது 12) என்ற மகன்
இருக்கிறான்.

இவனுக்கு 5 வயது இருக்கும் போதே மூக்கிலிருந்து ரத்தம் வடிந்தது. அதற்குரிய சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்தார்.

இருப்பினும் சில காலத்திற்கு பின்னர் அவனுடைய கண்ணிலிருந்து ரத்தம் வடியத் தொடங்கியது.

இதற்காக தனது சொத்துக்களை எல்லாம் விற்று மகனுக்கு சிகிச்சை அளித்தார்.

பணம் பற்றாகுறையான போது ஊர் மக்கள் கோவில் கட்ட நன்கொடையாக வைத்திருந்த ரூ.30 ஆயிரத்தை கொடுத்தனர்.

இதை வைத்துக் கொண்டு வேலூர் சி.எம்.சி வைத்தியசாலையில் பிரம்மையாவை அனுமதித்த போது "பிளட் பிலேடு லெட் டிசாடர்" என்ற நோய் தாக்கியிருப்பதாகவும் இது கோடியில் ஒருவருக்கு மட்டுமே வருமெனவும் இதனால் கண் பார்வை பாதிக்கப்படுமென்றும் கூறியிருக்கின்றனர்.

மேலும் இந்நோயை குணப்படுத்த ரூ.10 லட்சம் வரை செலவாகுமெனவும் டொக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top