புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கானகத்தில் அவர்களைக்காண ரிஷிகளும்,மற்றவர்களும் வந்த வண்ணம் இருந்தனர்.அவர்களுக்கு எப்படி உணவு அளிப்பது என அறியா தருமார் சூரியனை நோக்கி முறையிட்டார்.உன் அட்சய பாத்திரம் கிடைத்தது.அதில் சிறிதளவு உணவை இட்டாலும் பெருகி...எத்தனை பேர் வந்தாலும் ...அனைவருக்கும் உணவு
கிடைத்தது..எல்லோரும் உணவு அருந்திய பின் பாஞ்சாலி உணவு கொள்வாள்.பிறகு பாத்திரம் காலியாகி விடும்.அன்று உணவு பெறும் சக்தி அவ்வளவு தான்.மீண்டும் மறுனாள்தான்.இப்படியே வனவாசம் கழிய அருள் கிடைத்தது.

பான்டாவர்கள் காடு சென்றதும் திருதிராட்டினன் மனம் சஞ்சலம் அடைந்தது.குற்ற உணர்வு அவனை வறுத்தியது.விதுரரை அழைத்து மக்கள் மனநிலை எப்படி என் வினவினார்.

'மக்கள்'துயரால் வாடுகின்றனர் என்றும் அவர்களைத்திரும்ப அழித்துக்கொள்ளுதலே சிறந்தது என்றும் இல்லையேல் துரியோதனன் முதலானோர் அழிந்து போவார்கள்'என்றும் விதுரர் கூற..அதை திருதிராட்டிரன் ஏற்காது விதுரர் மீது சீறிப்பாய்ந்தான்.

என்னால் நாட்டைவிட்டு துரத்தப்பட்ட பாண்டவர்களிடத்தில் தான் உனது உள்ளம் இருக்கிறது நீயும் அவர்களிடத்தில் சென்று தங்கு ..இனி அரண்மணையில் இருக்கவேண்டாம்' என்றார்.

விதுரர் உடன் வனத்திற்குச்சென்று பாண்டவர்களுடன் சேர்ந்திருந்தார்.செய்தி அறிந்த பீஷ்மர் திருதிராட்டிரனிடம் சென்று ' விதுரரை நீ காட்டுக்கு அனுப்பவில்லை..அறத்தை நாட்டைவிட்டு அனுப்பிவிட்டாய்...இனி அஸ்தினாபுரத்தில் இருல் சூழும்'என்றார்.

திருதிராட்டினன் மீண்டும் நாட்டுக்கு வரச்சொல்லி அழைப்பு அனுப்ப.. விதுரர் திரும்பினார்.
விதுரர் காடு சென்று திரும்பியது அறிந்த துரியோதனன்..அவர்கள் ஏதோ சமாதான முயற்சியில் ஈடுபடுவதாக எண்ணி..திருதிராட்டினிடம் சென்று'பாண்டவர்கள் இங்கு திரும்பி வந்தால்..நான் தற்கொலை செய்துகொள்வேன்'என்றான்.

அப்போது வியாசர் தோன்றி ...திருதிராட்டிரனிடம் 'துரியொதனனின் தீய செயல்களை தடுத்து நிறுத்தாவிடின் பேரழிவு ஏற்படும் என எச்சரித்து மறைந்தார்.

மைத்ரேய மாமுனிவர் காட்டில் சந்தித்தார்.சூதாட்டத்தில் தான் இந்த விலை என உணர்ந்தார்.பீஷ்மர்,விதுரர்,துரோணர்,கிருபர் ஆகியோர் இருந்தும் இந்த கொடுமை எப்படி நேர்ந்தது என வியந்தார்.மனம் வருந்தினார்.நாடு சென்று துரியோதனனை சந்தித்து அவனை வன்மையாகக் கண்டித்தார்.ஆனால் துரியோதனனோ அவரை எதிர்த்து பேசினான்...கோபமுற்ற முனி..'பீமனால் மாண்டு தரையில் கிடப்பாய்..இது உறுதி'என்றார்.

துவாரகையில் கண்ணனுக்கு வனம் சென்ற செய்தி எட்டியது.அவர் காட்டுக்கு வந்து ஆறுதல் சொன்னார்.

'பகைவரிடம் க்ஷத்திரியர் இப்படி அடங்கிக்கிடப்பதா...அவர்களிடம் மோதி அழித்திடவேண்டாமா'என சகோதரர்கள் எண்ணினர்.திரௌபதியும் இக்கருத்தைக்கொண்டிருந்தாள்.ஆனால் தருமர்..தாம் கொண்ட கொள்கையில் இருந்த மாறுபட விரும்பவில்லை.'உயிர் போவதாய் இருந்தாலும் ..சத்தியத்திலிருந்து பிறழப்போவதில்லை .பெரியப்பாவின் கட்டளையை 13 ஆண்டுகள் நிறைவேற்றியே தீரவேண்டும்.'என தம்பியரிடம் உறுதியாகக்கூறினார்.நிபந்தனைக்குறிய காலம் முடிந்தபின் என்ன செய்வது எனத்தீர்மானிப்போம்'என அவர்களை அமைதிப்படுத்தினார்

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top