அண்ணன் மனைவியுடன் வீட்டுக்குப் பின்புறம் உள்ள மாட்டுக் கொட்டகையில் உல்லாசமாக இருந்தார் வாலிபர். அதை அவரது மனைவி நேரில் பார்த்து விட்டதால் கோபமடைந்து அவரும், அண்ணியும் சேர்ந்து கழுத்தை நெரித்துக் கொன்று விட்டனர்.
பெரம்பலூர் மாவட்டம் ககல்பாடி எறையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன். 30 வயதான இவரது மனைவி பெயர் தங்கமணி. கண்ணன் அவரது அண்ணன் ஜெயராமன், அண்ணி சத்யா ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.
கண்ணனுக்கும், சத்யாவுக்கும் இடையே கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இது தங்கமணிக்குத் தெரியவரவே அவர் கண்டித்துள்ளார். இதுதொடர்பாக கணவன், மனைவிக்கு இடையே தகராறு வெடித்தது.
இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் தங்கமணி தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கண்டுபிடிக்கப்பட்டார். இதுகுறித்து ஜெயராமன் போலீஸில் புகார் கொடுத்தார்.
போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்களுக்கு கண்ணன், சத்யா மீது சந்தேகம் வந்தது. இதையடுத்து இருவரையும் பிடித்து தீவிரமாக விசாரித்தபோது உண்மை வெளிப்பட்டது.
இதுகுறித்து போலீஸாரிடம் கண்ணன் கொடுத்த வாக்குமூ்லத்தில், சம்பவத்தன்று இரவு நானும், எனது அண்ணன் மனைவியும் வீட்டுக்குப் பின்புறம் உள்ள மாட்டுக் கொட்டகையில் உல்லாசமாக இருந்தோம்.
அப்போது எனது மனைவி அங்கு வந்து விட்டார். எங்களைப் பார்த்த அவர் கோபத்தில் கத்தினார். வீட்டில் உள்ளவர்களிடம் எங்களது தகாத உறவைச் சொல்லப் போவதாக கூறினார்.
இதனால் கோபமடைந்த நானும், எனது அண்ணியும் சேர்ந்து தங்கமணியின் கழுத்தைப் பிடித்து நெரித்தோம். அதில் அவர் இறந்து விட்டார். பின்னர் நானும் எனது அண்ணியும் சேர்ந்து தங்கமணி தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டது போல செட்டப் செய்து விட்டோம் என்றார்.
இதையடுத்து இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக