காதலனுடன் ஊர் சுற்றி திரிந்த 15 வயது சிறுமியை, அவளது பெற்றோர் திராவகம் ஊற்றி கொன்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ளது கோட்லி. இந்த பகுதியை சேர்ந்த முகமது ஜாபர்- சஜினின் இளைய மகள் அனுஷா(வயது 15)
.
இதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன், அனுஷா ஊர் சுற்றி திரிவதாக கிராம மக்கள் அவளது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து அனுஷாவை எச்சரித்துள்ளனர், அவள் கேட்காத காரணத்தினால் மகளை கண்மூடித்தனமாக அடித்துள்ளார் ஜாபர்.
இனிமேல் இப்படி செய்ய மாட்டேன் என கூறியுள்ள அனுஷா, தன் கையில் சூடு வைத்து கொண்டதாக அவளது தாய் தெரிவித்துள்ளர்.
இருப்பினும் அனுஷாவை வீட்டில் சேர்க்காமல், திறந்த வெளியில் தங்க வைத்துள்ளனர்.
அனுஷா கெஞ்சியும், மனமிறங்காத அவளது தாய் திராவகத்தை ஊற்றி கொன்று விட்டார். இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட பொலிசார், ஜாபரையும்- சஜினையும் கைது செய்துள்ளனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக