புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஓமான் தலைநகர் மஸ்கட்டில் பணிபுரியும் இலங்கை பெண்ணொருவர், தொழில் வழங்குனரினால் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆலோசகர் எம்.எம்.தேசப்பிரிய தெரிவித்தார்.


இலங்கையைச் சேர்ந்த முலிய நோனா (45 வயது) என்ற பெண் தனது தொழில் வழங்குனரிடம், பணிபுரிந்தமைக்கான சம்பளத்தை கேட்டுள்ளார். அதன்பின்னர் தொழில் வழங்குனர், குறித்த இலங்கைப் பணிப் பெண்ணை சித்திரவதை செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 2011 ஆண்டு, தொடக்கம் மஸ்கட்டில் குறித்த தொழில் வழங்குனரின் வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்து வருவதாகவும் அவர் தொடர்ச்சியாக துன்புறுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இத்துன்புறுத்தலின் காரணமாக தனது உடலில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட இலங்கைப் பெண், தனது நண்பியிடம் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக மஸ்கட்டில் உள்ள இலங்கை தொழில் ஆலோசகர் அலுவலக அதிகாரிகள் தகவல் அறிந்து, சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட இலங்கைப் பணிப்பெண்ணை சிகிச்சைக்காக அரச வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும் இலங்கை ஆலோசகர் எம்.எம்.தேசப்பிரிய தெரிவித்தார்.

குறித்த தொழில் வழங்குனரை அழைத்து கேட்டபோது, தனது குற்றத்தை ஒப்புக் கொண்டதாகவும், பெண்ணின் அனைத்து மருத்துவ செலவுகளையும் ஏற்றுக் கொள்வதாக குறிப்பிட்டதாக இலங்கை ஆலோசகர் தெரிவித்துள்ளார்

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top