ஹற்றன் செனன் தோட்டத்தில் பக்தி கலந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது ஆஞ்சநேயரின் முகத்தை கொண்டு உள்ள அபூர்வ வண்ணாத்திப் பூச்சி ஒன்று. இங்கு வசிக்கின்ற மருதமுத்து சுப்பையா என்பவரின் இல்லத்துக்குத்தான் கடந்த வெள்ளிக்கிழமை அழையா விருந்தாளியாக இப்பூச்சி சென்று உள்ளது.
உடைகளை உலர்த்துகின்றமைக்கு வெளியில் வந்தபோது சுப்பையாவின் மனைவிதான் இப்பூச்சியை முதலில் கண்டு இருக்கின்றார்.
இவர் ஊர்ப் பூசாரியிடம் ஓடோடிப் போய் அதிசயத்தை சொல்லி இருக்கின்றார்.
ஆஞ்சநேய சுவாமிதான் பூச்சியாக உருவெடுத்து வந்து உள்ளார் என்று அடித்துச் சொல்லி விட்டார் பூசாரி.
இப்பூச்சி பத்திரமாக பிடிக்கப்பட்டு வீட்டுச் சுவாமி அறையில் வைக்கப்பட்டு உள்ளது.
அதிகளவிலான மக்கள் நேரில் வந்து பக்திப் பரவசத்தோடு இப்பூச்சியைத் தரிசித்துச் செல்கின்றார்கள்.
0 கருத்து:
கருத்துரையிடுக