பண்டாரவளை மாநகரசபையில் பயிற்சியாளராக சேவை புரியும் இளம் பெண் ஒருவரை கடத்திச் சென்று மூன்று நாட்களாக பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
22 வயதான இப் பெண்ணை அதே மாநகரசபையில் பணிபுரியும் அலுவலக உதவியாளர் ஒருவரே கடத்திச் சென்று மூன்று நாட்களாக தனது கட்டுப்பாட்டில் வைத்து பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியுள்ளார்.
கடந்த வியாழக்கிழமை அப்பெண் வேலை முடிவடைந்து ஏனைய ஊழியர்களுடன் முச்சக்கர வண்டியில் சென்றுள்ளார்.
ஏனைய ஊழியர்கள் இறங்கியதும், அப்பெண்ணும் இறங்குவதாக கூற சந்தேகநபர் அப்பெண்ணை வீட்டிற்கு அழைத்துச் சென்று விடுவதாக கூறியுள்ளார்.
எனினும் அவர் குறித்த பெண்ணை வேறு இடம் ஒன்றிற்கு அழைத்துச் சென்று மூன்று நாட்களாக பூட்டி வைத்து பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியுள்ளார்.
இந்நிலையில் நேற்று (05) காலை பெண்ணை அவரது வீட்டிற்கு அருகில் சந்தேகநபர் கொண்டுவந்து விட்டுச் சென்றுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றொர் தெரிவித்தனர்.
தற்போது பாதிக்கப்பட்ட பெண் தியத்தலாவ பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அப்பெண்ணிற்கு அதிக இரத்தப் போக்கு ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப் பெண் கடத்திச் செல்லப்பட்ட சம்பவத்தில் நகரசபையில் சேவை புரிபவர்களும் சம்பந்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மாநகரசபை அலுவலக உதவியாளர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக