ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் லுங்கா ரெட்டி கூடத்தைச் சேர்ந்த 13 வயது மாணவி ரேணுகா. (பெயர் மாற்றப்பட்டுள்ளது).
இவர் அங்குள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். மேலும் ஒரு மருந்து கடையில் மாலை நேரம் பகுதி நேர வேலை பார்த்து வந்தார்.
பள்ளியில் வேதியியல் ஆசிரியராக பணியாற்றும் வெங்கட நரசிம்மமூர்த்தி மாணவி ரேணுகாவை சரியாக படிக்கவில்லை என்று திட்டினார். தினமும் என் வீட்டில் நடக்கும் சிறப்பு வகுப்பில் கலந்து கொள் இல்லையேல் உன்னை பெயிலாக்கிவிடுவேன். என்று மிரட்டினார்.
மாணவி ரேணுகா பயந்துபோய் சிறப்பு வகுப்புக்கு சென்றார். அவளிடம் ஆசிரியர் ஆபாசமாக பேசி செக்ஸ் சில்மிஷம் செய்தார். பாடம் நடத்துவது போல் தொடக்கூடாத இடத்தில் எல்லாம் தொட்டு பேசி செக்ஸ் சித்ரவதை செய்தார்.
இதுகுறித்து மாணவி ரேணுகா தனது பெற்றோரிடம் கூறி அழுதார். பெற்றோர்கள் அந்த ஆசிரியர், பற்றி புகார் கூற முயன்றபோது, வேண்டாம் இப்படி ஏதாவது செய்தால் என்னை பெயிலாக்கி விடுவார் என்று ரேணுகா தடுத்தார். எதிர்ப்பு வராததால் ஆசிரியரின் செக்ஸ் தொல்லை நீடித்தது.
இதனால் விரக்தி அடைந்த ரேணுகா தான் வேலை பார்க்கும் மருந்து கடையில் இருந்து தூக்க மாத்திரைகளை திருடி வந்து சாப்பிட்டார். மொத்தம் 11 தூக்க மாத்திரைகளை விழுங்கி சுயநினைவை இழந்தார். மகள் மயங்கி கிடப்பதை கண்ட பெற்றோர் அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
ஆசிரியரின் செக்ஸ் தொல்லையை தனது மகளின் தற்கொலை முயற்சிக்கு காரணம் என்று அறிந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். போலீசில் புகார் செய்தனர்.
இதற்கிடையே ஆசிரியர் வெங்கடநரசிம்ம மூர்த்தி தலைமறைவானார். அவரை போலீசார் தேடிவருகிறார்கள். பள்ளி நிர்வாகமும் அவரை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்தது.
தற்கொலைக்கு முயன்ற மாணவி ரேணுகாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
0 கருத்து:
கருத்துரையிடுக