புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

இளமை ஊஞ்சலாடுகிறது ரீமேக்: ரஜினி, கமல் வேடத்தில் தனுஷ், சிம்பு?ஜினி, கமல் இணைந்து நடித்த இளமை ஊஞ்சலாடுகிறது படம் ரீமேக் ஆகிறது. 1978-ல் இப்படம் ரிலீசானது
. நாயகிகளாக ஸ்ரீபிரியா, ஜெயசித்ரா நடித்தனர். ஸ்ரீதர் இயக்கினார். இளையராஜா இசையமைத்தார்

. ரூ.68 லட்சத்தில் இப்படத்தை எடுத்தனர். இதில் இடம் பெற்ற கிண்ணத்தில் தேன் வடித்து, என்னடி
மீனாட்சி சொன்னது என்னாச்சி, ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது, தண்ணி கருத்திருக்கு
போன்ற பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் கலக்கின.

படமும் வெற்றிகரமாக ஓடியது. இதன் ரீமேக்கில் தனுஷ், சிம்புவை நடிக்க வைக்க முயற்சிகள்
நடக்கின்றன. ரஜினி வேடத்துக்கு தனுசும், கமல் கேரக்டருக்கு சிம்புவும் பொருத்தமாக இருப்பார்கள்
என்று கூறப்படுகிறது. ஸ்ரீபிரியா வேடத்தில் ஸ்ருதிஹாசனிடம் பேசுகிறார்கள்.

தனுசும், சிம்புவும் தற்போது நெருங்கிய நண்பர்களாகி உள்ளனர். எனவே இருவரும் இப்படத்தில்
நடிப்பார்கள் என தெரிகிறது. இருவரும் கைவசம் உள்ள படங்களை முடித்ததும், இளமை
ஊஞ்சலாடுகிறது பட ரீமேக் வேலைகள் துவங்கும். 

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top