தனது தாயின் வீட்டை உடைத்து அங்கிருந்து 4,83,500 ரூபா பெறுமதியான தங்க நகையை கொள்ளையிட்ட மகன், அவரது மூன்று நண்பர்கள், ஒரு நண்பனின் தாய் ஆகியோர் சிலாபம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
.
கொள்ளையிடப்பட்ட தங்க நகை சிலாபம் நகர அடகு நிலையம் ஒன்றில் அடகு வைக்கப்பட்ட நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
தான் வீட்டில் இல்லாத சமயத்தில் வீட்டு ஜன்னல் உடைக்கப்பட்டு தங்க நகை கொள்ளையிடப்பட்டுள்ளதாக தாய் ஒருவர் சிலாபம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.
கடந்த டிசம்பர் 8ம் திகதி இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது குறித்த விசாரணை நடாத்திய சிலாபம் பொலிஸார் முதலில் முறைப்பாடு செய்த பெண்ணின் மகனை கைது செய்தனர்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கொள்ளை சம்பவம் அம்பலமாகியுள்ளது.
இதனையடுத்து கொள்ளையுடன் தொடர்புடைய ஏனையோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நால்வர் சிலாபத்தைச் சேர்ந்தவர்கள் என்பதோடு மற்றுமொருவர் எழுவக்குளம் பகுதியைச் சேர்ந்தவராவார்.
சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.