சினிமாவில் நடிக்க வந்திருக்கும் தனது தம்பிக்கு உதவ மாட்டேன் என்கிறார் நடிகர் ஆர்யா.
ஆர்யாவின் தம்பி சத்யா ‘புத்தகம் என்ற படம் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். இதனை நடிகர் விஜய் ஆதிராஜ் இயக்குகிறார்.
தம்பி நடிக்க வந்திருப்பது குறித்து ஆர்யா கூறும்போது...
‘என் தம்பி நடிக்க வந்திருக்கிறார். அவருக்கு உதவும் எண்ணம் எனக்கில்லை. அவர் முன்னணி நடிகராக வேண்டும் என்றால் கடுமையான உழைப்புதான் கைகொடுக்கும்.
தன்னுடைய உழைப்பால் ஒருமுறை வெற்றியை ருசித்தால்தான் சினிமா துறையில் அவர் காலூன்ற முடியும். இதனால்தான் அவரைவிட்டு தள்ளியே இருக்கிறேன். அவர் நடிக்கும் படம் வெற்றி அடைய பிரார்த்திக்கிறேன். அவரை எனது சகோதரராக பார்ப்பதைவிட சிறந்த நண்பராகவே பார்க்கிறேன்.
தற்போது கண்ணன் இயக்கத்தில் ‘சேட்டை‘ படத்தில் நான் நடிக்கிறேன். ஹிந்தியில் வெளியான டெல்லி பெல்லி படத்தின் ரீமேக்தான் இது. விரைவில் திரைக்கு வரவுள்ளது. அந்த நாளை நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்றார்.